அயனாவரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்!!
அயனாவரம் பணிமனையில் 126 பஸ்கள் உள்ளன. இங்கிருந்து பெசன்ட் நகர், ரெட்ஹில்ஸ், ஆவடி, திருவான்மியூர், கோயம்பேடு உள்ளிட்ட சென்னையில் பல இடங்களுக்கு பஸ்கள் செல்கின்றன. 741 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இந்த தொழிலாளர்கள் பணிக்காக அதிகாலை 3 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பணிக்கு வரும் தொழிலாளர்கள் தினமும் காலை 10 பேர், மாலை 10 போ் பேருந்துகள் இல்லை, டிரைவர் இல்லை என திருப்பி அனுப்படுகின்றனர். இதில் பெரும்பாலும் கண்டக்டர்கள்தான் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். மாதத்தில் 15 நாட்கள் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை பணிமனை முன்பு பணி வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் கூறியதாவது:- போராட்டத்தில் ஈடுபட்டோர் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறோம்.
பஸ்கள் இல்லாமலும் டிரைவர் இல்லாமலும் பணிகள் வழங்காவிட்டால் முந்தைய ஆட்சி காலத்தில் பஸ் நிலையத்தில் பயணிகள் பிக் அப், பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ, மற்ற வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி, யோகா விடுப்புகள் அனுப்பினால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. மேலும் பணி வழங்காமல் திருப்பி அனுப்பினால் பணிக்கு வந்ததற்கான வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளோம் என்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.