;
Athirady Tamil News

‘ரஷ்யா இராணுவ வெற்றியை அடையாது’ – இரத்தக்களரியாக மாறப்போகும் களமுனை !!

0

ரஷ்யா தன்னிடமிருந்து கைப்பற்றிய பிரதேசத்தை உக்ரைன் திரும்பப் பெறுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதால் வரவிருக்கும் வாரங்களில் ரஷ்ய – உக்ரைன் களமுனை இரத்தக்களரியாக இருக்கும் என அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஜெரனல் மார்க் மில்லி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, உக்ரைனில் ரஷ்யா இராணுவ ரீதியான வெற்றியை அடையாது எனவும் உக்ரைன் நிலப்பரப்பில் இருந்து ரஷ்யப் படைகளை உடனடியாக முழுமையாக பின்வாங்கச் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் விசேட படை நடவடிக்கை கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், உக்ரைன் அரசாங்கத்தை இராணுவ ரீதியாக கவிழ்ப்பது உட்பட ரஷ்யாவின் உண்மையான மூலோபாய இலக்குகள் எடப்படுவது சாத்தியமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

உக்ரைனின் பாதுகாப்பு தொடர்பான குழுவின் உறுப்பு நாடுகளுடனான காணொளி காட்சி வழியான சந்திப்பில் ஜெனரல் மார்க் மில்லி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான ரஷ்யப் படையினர் நிலைகொண்டுள்ளனர் எனவும் ரஷ்யப் படைகளிடம் இழந்த பகுதிகள் அனைத்தையும் உடனடியாக கைப்பற்றுவது சாத்தியமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

மோதல்கள் தொடரும் என்பதுடன், அது இரத்தகளரிமிக்கதாகவும் கடினமானதாகவும் இருக்கும் எனவும் ஜெனரல் மார்க் மில்லி சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் இரண்டு தரப்பினரும் சமரசப் பேச்சுக்களுக்கு செல்வார்கள் அல்லது இராணுவ ரீதியில் முடிவொன்றை எட்டுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இருதரப்பும் தெளிவான வெற்றியை பெறும் நிலையில் இல்லை என்பதுடன், தற்போது பேச்சுக்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.