ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி ரகம்; உலகிலேயே விலை உயர்ந்த மாம்பழம்: ஒரு கிலோ ரூ2.5 லட்சம்!!
உலகின் விலை உயர்ந்த மாம்பழம் என்று அழைக்கப்படும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி மாம்பழம் தற்போது கர்நாடக மாநிலம் கொப்பலா மாவட்டத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. மியாசாகி என்று அழைக்கப்படும் மாம்பழம் கிலோ ஒன்றுக்கு ரூ2.5 லட்சம் முதல் 2.7 லட்சத்தில் விற்பனை ஆகிறது.
ஆண்டுதோறும் மாம்பழ பருவத்தில் கர்நாடக மாநிலம் கொப்பலில் மாம்பழ மேளாவை அரசு தோட்டக்கலைத்துறை நடத்துகிறது. இந்நிலையில், இந்தாண்டு மாம்பழ மேளா கடந்த இரண்டு தினங்களுக்கு முன் துவங்கி, மே, 31ம் தேதி வரை நடக்கிறது. இந்தாண்டு மாம்பழ மேளாவில் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மாம்பழம் இடம்பெற்றுள்ளது.