;
Athirady Tamil News

வடகொரியாவில் அட்டூழியம் – 2 வயது குழந்தை உட்பட குடும்பமே சிறையில் !!

0

வடகொரியாவில் கையில் பைபிள் உடன் சிக்கிய 2 வயதுக் குழந்தை உட்பட, ஒரு குடும்பமே சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியாவில் பல்வேறு மதத்தினர் இருந்தாலும் அந்நாட்டு அரசாங்கம் கடவுள் மறுப்பை தீவிரமாக பின்பற்றி வருகிறது.

மத உரிமைகள், மதச் சடங்குகள் செய்யும் உரிமைகள் உள்ளன. ஆனால், வட கொரிய அரசாங்கம் எந்த மதத்தையும் ஊக்குவிப்பதில்லை என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், மத தண்டனைகள் உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணமும் உள்ளன.

இந்த நிலையில் தான், பைபிள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட பெற்றோருடன் அவர்களின் 2 வயது குழந்தைக்கும் வடகொரிய அரசாங்கம் ஆயுள் தண்டனை விதித்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் மதச் சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், வட கொரியாவில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் 70,000 கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறைக்கு அனுப்பப்பட்டவர்களில் இரண்டு வயது ஆண் குழந்தையும் இருந்தது. அவனது பெற்றோரிடம் பைபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

மதப் பழக்கவழக்கங்கள் மற்றும் பைபிளை வைத்திருந்ததற்காக அந்தக் குடும்பம் கைது செய்யப்பட்டுள்ளது. அந்தக் குழந்தை உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் 2009ஆம் ஆண்டு முதல் ஆயுள் தண்டனை பெற்று அரசியல் சிறை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் தாங்கள் மோசமான நிலையில் உள்ளதாகவும், பல்வேறு வகையான உடல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும் விவரித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.