மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் !!
தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான யோசனையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக பதில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்து தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்கு மேற்படிப்பைத் தொடர வட்டியில்லா கடனை வழங்கும் முன்மொழிவை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாக ருவன்வெல்லவில் நடைபெற்ற சந்திப்பொன்றில் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தக் கடன் திட்டத்தின் கீழ் படிப்பதற்கு ரூ.900,000 வட்டியில்லா கடன் கிடைக்கும்.
அத்துடன் தினசரி செலவுக்காக ரூ.300,000 கிடைக்கும். படிப்பு முடிந்ததும், இந்தக் கடனை வட்டி இல்லாமல் திருப்பிச் செலுத்த இன்னும் இரண்டு ஆண்டுகள் கிடைக்கும்.