மூதாட்டியை தீண்டாத அரிசி கொம்பன்!!
அரிசி கொம்பன் யானை கம்பம் நகரில் புகுந்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது குறித்த காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மிரண்டு ஓடி வந்த அரிசி கொம்பன் யானை ஒரு பகுதியில் சிறிது நேரம் நின்றது.
பின்னர் மீண்டும் வந்த வழியே திரும்பி ஓடியது. அப்போது அங்கு மூதாட்டி ஒருவர் சாலை ஓரத்தில் நின்றிருந்தார். அரிசி கொம்பன் யானை அவரை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து சென்ற காட்சி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.