;
Athirady Tamil News

ஹிட்லரின் வீட்டில் மனித உரிமைகள் பயிற்சி வளாகம் – வெளியான அறிவிப்பு!!

0

அடோல்ஃப் ஹிட்லர் வசித்து வந்த வீடு மனித உரிமைகள் பயிற்சி மையமாக மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றிய அறிவிப்பை ஆஸ்த்ரியாவின் உள்கட்டமைப்பு துறை அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்டது. இந்த வீடு நாஜிக்கள் யாத்திரை மேற்கொள்ளும் அளவுக்கு புனித தளமாக மாறுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய ஆலோசனை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வியென்னாவில் இருந்து 284 கிலோமீட்டர்கள் கிழக்கு திசையில் அமைந்திருக்கும் வடமேற்கு ஆஸ்த்ரியாவின் பிரௌனாவ் அம் இன் பகுதியில் உள்ள கட்டிடத்தில் அடோல்ஃப் ஹிட்லர் பிறநதார். ஹிட்லரின் மூன்றாவது வயது வரை அவர் அங்கு வசித்து வந்தார்.

இந்த கட்டிடத்தின் உரிமையாளர் கெர்லிண்ட் பொம்மர். ஹிட்லர் பிறக்கும் முன் அந்த கட்டிடத்தை இந்த குடும்பம் தான் வைத்திருந்தது. 2016 ஆம் ஆண்டு அரசாங்கம் இந்த கட்டிடத்தை கையகப்படுத்தியது. 2019 ஆண்டு இந்த கட்டிடம் காவல் நிலையமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், அறிவிப்பின் படி இந்த கட்டிடம் காவல் நிலையமாக மாற்றப்படவில்லை. அந்த வகையில் தான் ஹிட்லரின் வீடு ஆஸ்த்ரியாவின் மிகப்பெரும் மனித உரிமைகள் ஆணைய அலுவலகம் மற்றும் பயிற்சி மையமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.