நடுவானில் விமான கதவை திறந்த விவகாரம்- வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!!
தென் கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜெஜூ தீவில் இருந்து டேகு பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை விமானம் ஒன்று புறப்பட்டது. விளையாட்டு வீரர்கள் உள்பட சுமார் 194 பேர் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, விமானத்தில் இருந்த பயணி ஒருவர் திடீரென விமானத்தின் அவசர கதவை திறந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால், விமானத்தில் இருந்த பயணகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எனவே விமானம் தரை இறங்கியவுடன் அவர்கள் அனைவரும் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே விமானத்தின் கதவை திறந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இதில் அந்த வாலிபர் தனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடனடியாக இறங்க வேண்டும் என்பதற்காக கதவை திறந்ததாக கூறினார். இந்நிலையில், விமான பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காக வாலிபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்த நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.