நடாஷாவின் நகைச்சுவைக்கு சிரித்தவர்களுக்கு வலை!!
கொழும்பில் நடைபெற்ற நடாஷா எதிரிசூரியவின் நகைச்சுவை நிகழ்ச்சியில் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், குறித்த நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தவர்களை இனங்கண்டுகொள்ளவும் அவர்களிடம் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
பௌத்த மதம் தொடர்பில் இழிவான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் நடாஷா நேற்றைய தினம் (28) கைது செய்யப்பட்டு ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நடாஷாவின் குறித்த நகைச்சுவைகளுக்கு பாராட்டு தெரிவித்தவர்கள் மற்றும் கைதட்டி சிரித்தவர்களை கைது செய்ய பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடாஷா எதிரிசூரியவின் பௌத்த மதம் தொடர்பான கருத்துகள் வேண்டுமென்றே பதவு செய்யப்பட்டவை எனவும், இவ்வாறான கருத்துகளை தெரிவிக்க நடாஷாவைத் தூண்டிய நபரை அடையாளம் காணவும் விசாரணைகளில் கவனம் செலுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.