;
Athirady Tamil News

ரஷ்யாவை முதுகில் குத்திய சீனா – சோவியத் ரஸ்யாவுக்கு விழுந்த பேரிடி..!

0

பொதுவுடமை சித்தாந்தமான சீனா சோசலிசம் பேசும் ரஷ்யாவிற்கு ஆதரவாக அண்மைகாலமாக மாறி வந்தது.

இருப்பினும் சர்வதேச அரசியலைப் பொருத்தவரை தங்கள் நாட்டின் இறையான்மையை பாதுகாக்க இந்நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஒரு ஆண்டை கடந்தும் தொடர்ந்து நடந்து வரும் உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கி ஆயுதங்களை வழங்கி வருகிறது. அதேசமயத்தில் அமெரிக்காவை கடுமையாக எதிர்த்து வரும் ரஷ்யா மற்றும் சீனா ஒன்று சேர்ந்துள்ளது.

சமீபத்தில் கூட ரஷ்யாவிற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் நேரடியாக பயணம் செய்தார். அதேபோல் ரஷ்யாவின் பொருளாதாரத்தை நொறுக்கி விட்டால், அந்நாட்டால் போரை தொடர முடியாது என அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் அது தப்புக் கணக்காக மாறி விட்டது.

அதாவது இதுவரை உலக வர்த்தக பரிவர்த்தனைகள் அமெரிக்காவின் நாணய மதிப்பான டாலரில் நடந்து வந்த நிலையில், இத்தகைய பொருளாதர தடை நடவடிக்கைகளுக்கு பிறகு அந்தந்த நாட்டு நாணய மதிப்புகளில் அதாவது ரஷ்யாவின் ரூபிள், சீனாவின் யுவான், இந்தியாவின் ரூபாய் மதிப்பில் வர்த்தகத்தை தொடங்கியது.

இந்த நடவடிக்கைகளால் ரஷ்யாவின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல், அமெரிக்காவின் பொருளாதாரம் மங்கியது. ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை ரூபாய் மதிப்பில் இந்தியா வாங்கியது.

அதேபோல் ரஷ்யாவும் சீனாவும் தங்கள் நாணய மதிப்புகளில் வர்த்தகத்தை மேற்கொண்டன. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் சீராக உள்ளது. இதனால் கோபமடைந்த அமெரிக்கா உக்ரைன் பிரச்சனையை மேற்கொண்டு முடுக்கி விட்டது.

ஆனால் அது சீனாவையோ ரஷ்யாவையோ பாதிக்கவில்லை. சீனாவின் வலிமைமிக்க அதிபராக ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராக பதவி ஏற்றபின் முதன்முறையாக ரஷ்யா சென்று தனது நிலைபாட்டை உணர்த்தினார்.

அதேபோல் உக்ரைன் போரை சமாளிக்க ரஷ்யாவிற்கு சீனா ஆயுதங்கள் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இப்படியாக நண்பர்கள் அளவில் இருந்த ரஷ்ய சீன உறவு தற்போது மீண்டும் விரிசல் அடையத் துவங்கியுள்ளது.

சீனாவிற்கு உளவு பார்த்ததாக கூறி ரஷ்யாவின் உயர்ந்த பதவியில் இருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் உயர்ந்த அறிவியல் ஆய்வு நிறுவனமான சைபிரியா கிறிஸ்டியானோவிச் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் அலெக்சாண்டர் சிப்லிக் மற்றும் அவருடன் இரண்டு ஹைப்பர் சோனிக் ஏவுகணை தொழில்நுட்ப அதிகாரிகள் ரஷ்யாவின் பாதுகாப்பு சார்ந்த முக்கிய தகவல்களை சீனாவிற்கு பகிர்ந்ததற்காக ரஷ்ய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் பாதுகாப்புத்துறை சார்ந்த தகவல்கள் கசியவிட்டதாக கைது செய்யப்பட்ட மூவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.