எந்தவித அடையாள சான்றும் இல்லாமல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதிப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி- ஐகோர்ட் உத்தரவு !!
ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது. செப்டம்பர் 30-ந்தேதி வரை வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை எந்தவித அடையாள சான்றும் இல்லாமல் மாற்றிக்கொள்ளலாம். ஒரு நபர் தினமும் ரூ.20 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. இதே போல் ஸ்டேட் வங்கியும் தங்கள் கிளைகளில் அடையாள சான்று இல்லாமல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் என்று கூறியுள்ளது.
எந்தவித அடையாள சான்றும் இல்லாமல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் அறிவிப்பை எதிர்த்து வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சதீஷ்குமார் சர்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.