2030-க்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டம்!!
சீனா கடந்த காலங்களில் வெற்றிகரமாக சந்திரன் மற்றும் செவ்வாய் கோளுக்கு ரோவரை அனுப்பி உள்ளது. அதேபோல் 2021-ல் சீனாவும், ரஷியாவும் சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்தன. இந்தநிலையில் விண்வெளி போட்டிகள் தற்போது தீவிரம் அடைந்து வரும் நிலையில் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை சீனா நேற்று அறிவித்தது.
இதன் மூலம் மனிதர்களை நிலவில் தரை இறக்குவது, நிலவினை ஆய்வு செய்தல் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்வதே தனது இலக்கு என சீனா கூறி உள்ளது.