;
Athirady Tamil News

மாற்றுத்திறனாளி மாணவியுடன் கல்லூரிக்கு சென்று பட்டம் பெற்ற வளர்ப்பு நாய்!!

0

அமெரிக்காவில் நியூஜெர்சியில் சவுத் ஆரஞ்ச் பகுதியில் செட்டான் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. புகழ்பெற்ற இந்த பல்கலைக்கழகத்தில் 90-க்கும் மேற்பட்ட பட்டப்பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவியான கிரேஸ் மரியானி என்பவர் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு பயின்று வந்தார். இவர் வகுப்புக்கு செல்லும் போதெல்லாம் தனக்கு துணையாக ஜஸ்டின் என்ற தனது வீட்டு வளர்ப்பு நாயையும் அழைத்து சென்றார். கிரேசுடன் அனைத்து வகுப்புகளிலும் அந்த நாயும் கலந்து கொண்டுள்ளது. எனவே அந்த நாயின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்ட பல்கலைக்கழகம் முடிவு செய்தது.

இந்நிலையில் கிரேஸ் தனது பாடத்தில் முழுதேர்ச்சி பெற்று பட்டப்படிப்பு முடித்ததையடுத்து அவருக்கு பட்டயச்சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர் பட்டம் பெற பல்கலைக்கழகத்திற்கு சென்ற போது, கிரேசுக்கு பட்டயச்சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் பல்கலைக்கழகம் சார்பில் ஜஸ்டின் நாய்க்கும் அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆடை அணிவித்து, டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது. அந்த சான்றிதழை ஜஸ்டின் தனது வாயில் கவ்வியபடி பெற்று செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.