ரொபர்ட் ஃப்லொய்ட் வருகிறார் !!
விரிவான அணு ஆயுதப் பரிசோதனைத் தடை ஒப்பந்த அமைப்பின் நிறைவேற்று செயலாளர் கலாநிதி ரொபர்ட் ஃப்லொய்ட் 2023 மே 31 முதல் ஜூன் 04 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, கலாநிதி ரொபர்ட் ஃப்லொய்ட், ஜனாதிபதி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளதுடன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
இலங்கை 1996 ஒக்டோபர் 24ஆந் திகதி விரிவான அணு ஆயுதப் பரிசோதனைத் தடை உடன்படிக்கையிலும், ஜுன் 2000 இல் அமைப்புடன் வசதி சார்ந்த ஒப்பந்தமொன்றிலும் கைச்சாத்திட்டதுடன், இது விரிவான அணு ஆயுதப் பரிசோதனைத் தடை உடன்படிக்கைக்கு இணங்குவதை சரிபார்ப்பதற்காக சர்வதேசக் கண்காணிப்பு அமைப்பின் ஒரு பகுதியாக கண்டி பல்லேகலேயில் துணை நில அதிர்வு நிலையத்தை நிறுவுவதற்கு வழிவகுத்தது.
விரிவான அணு ஆயுதப் பரிசோதனைத் தடை ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், எல்லா இடங்களிலும், பூமிக்கு மேலே, தண்ணீருக்கு அடியில் மற்றும் நிலத்தடியில் அணு வெடிப்புக்களை தடை செய்வதாகும்.
இந்த விஜயம் இலங்கைக்கும் விரிவான அணு ஆயுதப் பரிசோதனைத் தடை ஒப்பந்த அமைப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.