ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த ரஷ்யா..!!
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து, ரஷ்யா ஐரோப்பிய நாடுகளை எச்சரித்ததாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை தொடர்ந்து வழங்கினால், ரஷ்யாவின் தாக்குதலின் போது தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான ஆயுதங்கள் அவர்களிடம் இருக்காது” என ரஷ்யாவின் செச்சினியா மாகாணத்தின் ஆளுநரான ரம்ஜான் கதிரோவ் தெரிவித்துள்ளார்.
மொஸ்கோ மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
“ரஷ்ய பொதுமக்கள் உக்ரைனின் தாக்குதலால் அமைதியடைய மாட்டார்கள். ஆனாலும், உக்ரைனிய பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மொஸ்கோவின் வான் பாதுகாப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.” என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்ததாக கதிரோவ் தெரிவித்துள்ளார்.
மொஸ்கோ மீதான ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இராணுவ சட்டத்தை அறிவிக்க வேண்டும் என ரஷ்ய அரசிடம் கதிரோவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, மொஸ்கோ மீதான ட்ரோன் தாக்குதலைக் கண்டித்து வாக்னர் வாடகைப் படையின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.