உக்ரைனுக்கு மேலும் 300 மில்லியன் டாலருக்கு ராணுவ நிதி உதவி அறிவித்த அமெரிக்கா!!
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி ஓராண்டையும் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளைச் செய்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனுக்கு புதிதாக சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிக்கான வெடிமருந்துகள் ஆகியவையும் இத்தொகுப்பில் அடக்கம். அதிபர் ஜோ பைடன் இதற்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளார். ரஷியா உக்ரைன் மீது படையெடுக்கத் துவங்கியதில் இருந்து இதுவரை அமெரிக்கா 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.