ஓரினச்சேர்க்கையாளர் அதிபராக தேர்வு!!
பால்டிக் நாடுகளில் ஒன்றான லாட்வியாவில் 100 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில், பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளை விட ஒரு வாக்கு கூடுதலாக பெற்று வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த எட்கர்ஸ் ரின்கெவிக்ஸ்-ஐ அதிபராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
இவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்துறை, பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது அதிபராக இருக்கும் எகில்ஸ் லெவிட்ஸ் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால் ரின்கெவிக்ஸை எதிர்த்து போட்டியிட்ட தொழிலதிபர் உல்டிஸ் பிலென்ஸ் 25 வாக்குகள் மட்டுமே பெற்றார். ரின்கெவிக்ஸ் 2014ம் ஆண்டில் தான் ஒரு ஓரினசேர்க்கையாளர் என்று பகிரங்கமாக அறிவித்தவராவார். அதன்படி, பால்டிக் நாடுகளின் முதல் ஒரினசேர்க்கை அதிபர் என்ற பெயரை பெற்றுள்ளார்.