நியூஸிலாந்தில் இன்று ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்!
நியூஸிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் வசிக்காத, ஆக்லாந்து தீவுகளுக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 33 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் பூகம்ப கண்காணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
மேலும், இப்பூகம்பத்தின் அதிர்வு உணரப்பட்டதாகவோ, சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாகவோ இல்லை என அந்த நாட்டு வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.