புற்று நோயை பொருட்படுத்தாமல் 72 வயதில் தங்கம் வென்ற மூதாட்டி!
கனடாவில் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 72 வயதான பெண் ஒருவர் நீச்சல் போட்டித் தொடரில் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
கியூபெக்கைச் சேர்ந்த லினா கோர்டோயிஸ் என்ற மூதாட்டியே இவ்வாறு நீச்சல் போட்டித் தொடரில் சாதனை படைத்துள்ளார்.
கல்கரியில் நடைபெற்ற கனடிய சிரேஸ்ட அழகியல் நீச்சல் போட்டித் தொடரில் இவ்வாறு வெற்றியீட்டியுள்ளார்.
ஒரு புறம் புற்று நோய்க்கான சிகிச்சை மறுபுறம் நீச்சல் பயிற்சி என அதிக மன வலியுமைடன் இந்தப் பெண் போட்டியில் பங்குபற்றி வெற்றிகளை பதிவு செய்து வருகின்றார்.
100 மீற்றர் பட்டர்பிளை மற்றும் 400 மீற்றர் மெட்லீ ஆகிய இரண்டு போட்டிகளிலும் அபார திறமைகளை வெளிப்படுத்தி தங்கப் பதக்கங்களை லினா வென்றெடுத்துள்ளார்.
எந்நேரமும் சிரித்துக் கொண்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இந்த வெற்றியை அடைந்துள்ளதாக லினாவின் பயிற்றுவிப்பாளர் தெரிவிக்கின்றார்.