காங்கிரஸ் ஏழை எளிய மக்களுக்கு வாக்குறுதி அளித்தால் பிரதமருக்கு பிரச்சினையாக உள்ளது- கார்கே விமர்சனம்!!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து நேற்று ராஜஸ்தானில் பாஜக சார்பில் நிறைவு விழா கொண்டாடப்பட்டது. ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் அளிக்கும் புதிய வாக்குறுதிகளில் சூத்திரம் உள்ளது. அவர்களின் உத்தரவாதங்கள் நாட்டை திவாலாக தான் ஆக்கும்” என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், ” பிரதமர் மோடி பெரிய தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்குவார். ஆனால், ஏழை எளிய மக்களுக்கு நாங்கள் வாக்குறுதிகள் அளித்தால் அது பிரதமருக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது” என்றார்.