அமெரிக்காவில் 3 மாணவர்கள் சுட்டுக்கொலை- மர்மநபர் வெறிச்செயல்!!
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது பென்சிலோனியா. இங்குள்ள ஒரு வீட்டு முன்பு நேற்று மர்மநபர் ஒருவன் தான் வைத்து இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் இறந்தனர். 33 வயது வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று குண்டு காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்கள் பெயர் ஜோசுபா லூசோ (வயது19) ஜீசஸ் பெரோஸ் (8) ஜெபாஸ்டியான் (9) என்பது தெரியவந்தது. வீட்டுக்குள் இருந்தவர்கள் எந்த காயமும் இல்லாமல் உயிர் தப்பினார்கள். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மர்மநபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எதற்காக இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டார் என்பது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.