;
Athirady Tamil News

என் போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது- ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!!

0

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று அவர் சான்பிரான்சிஸ்கோ நகரில் சாண்டா கிளாராவில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். இதன் தொடர்ச்சியாக கலிபோர்னியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை சேர்ந்த அமிடி மற்றும் ஷான் சங்கரன் ஆகியோருடன் கலந்துரையாடினார். அவர்களுடன் செயற்கை நுண்ணறிவின் பல்வேறு அம்சங்கள் குறித்து நிபுணர்கள் குழுவின் விவாதத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டார்.

மனித குலத்தின் மீதான அவற்றின் தாக்கங்கள் மற்றும் அதன் ஆளுகை, சமூக நல நடவடிக்கைகள் மற்றும் தவறான தகவல் போன்ற சிக்கல்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது:- தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பில் பொருத்தமான விதிமுறைகள் இருக்க வேண்டும். எனது ஐ போன் கூட ஒட்டுக்கேட்கப்படுவது எனக்கு தெரியும். (அப்போது அவர் தனது ஐ போனில் மிஸ்டர் மோடி என கூறினார்) அதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஒரு அரசு உங்கள் தொலைபேசியை ஒட்டுக்கேட்க வேண்டும் என நினைத்தால் யாரும் உங்களை தடுக்க முடியாது.

இது எனது உணர்வு. தொலைபேசியை ஒட்டு கேட்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தால் அதை ஒன்றும் செய்யமுடியாது. நான் எதை செய்ய நினைத்தாலும், வேலை செய்தாலும் அது அரசுக்கு தெரியும். அது நாட்டின் நன்மைக்காகவே இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். இது தொடர்பாக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷான் சங்கரன் கூறும் போது சமீபத்திய தொழில்நுட்பங்கள் வளர்ச்சி குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்தது தன்னை வெகுவாக கவர்ந்திழுத்தது என கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.