பிரித்தானியாவில் வீடுகளை கொள்வனவு செய்யவுள்ளோருக்கு அடித்த யோகம் !!
பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் வீட்டு விலைகள் மிக கடுமையான வேகத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதை ஆதாரப்படுத்தும் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
நேற்றுடன் முடிவடைந்த மே மாதம் வரையான தரவுகளின் படி, வீட்டு விலைகள் 3.4 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் இது கடந்த 2009 மே மாதத்துக்குப் பின்னரான மிகப்பெரிய சரிவு எனவும் பிரித்தானியாவின் கட்டிட சங்கமான நேசன் வைட் சுட்டிக்காட்டியுள்ளது.
பிரித்தானியாவில் வீடுகளை கொள்வனவு செய்வதற்குரிய அடமானக் கடனின் வட்டி வீதங்கள் தொடர்ந்தும் உயர்ந்து வருவது வீடுகளின் விற்பனை சந்தையைத் தாக்கிவரும் நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் வீட்டு விலைகள் மிக கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த மாதத்திலும் வீடுகளின் விலைகள் மேலும் 0.1 வீத்தால் குறைந்துள்ளதால் தற்போது பிரித்தானியாவில் தேசியளவில் சராசரி வீடொன்றின் விலை இரண்டு லட்சத்து அறுபதினாயிரத்து,736 பவுண்ஸ்சாகப் பதிவாகியுள்ளது.
வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைவது முதன் முறையாக வீடுகளை கொள்வனவு செய்பவர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கினாலும் உயர்ந்து செல்லும் அடமான கடன்களின் வட்டி வீதம் பெரும் சவால்களை உருவாக்கியுள்ளது.