பெற்ற மகளை 25 முறை கத்தியால் குத்திக்கொன்ற தந்தை..!
இந்தியாவின் குஜராத்தில் தனது மகளை 25 முறை கத்தியால் குத்திக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் ராமானுஜ் சாஹூ (45) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமானுஜ் சாஹூவுக்கும் அவரது மகள் சந்தாவுக்கு இடையே மொட்டை மாடியில் தூங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஆத்திரமடைந்த ராமானுஜ் வீட்டில் இருந்த கத்தி ஒன்றை எடுத்து மகளை சரமாரியாக வெட்டியுள்ளார். அதன் பின்பும் ஆத்திரம் அடங்காத ராமானுஜ் மனைவியையும் துரத்திச் சென்று தாக்கியுள்ளார்.
இதில் அவரது மனைவியின் இரு விரல்கள் துண்டாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான சந்தா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உள்ளூர் காவல்துறையினர் ராமானுஜை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பிலான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.