ரஷ்ய தூதரகங்களை முடக்க ஜெர்மன் அதிரடி முடிவு !!
ஜெர்மனில் இயங்கி வரும் 5 ரஷ்ய தூதரகங்களில் 4 தூதரகங்களை மூடுவது என ஜெர்மன் அரசாங்க முடிவு செய்துள்ளதாக ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இன்று (01) தெரிவித்துள்ளார்.
“உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரியில் தொடங்கியது.
அதற்கு பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அதில் ஜெர்மனும் ஒன்றாகும்.
இதனை தொடர்ந்து, ரஷ்யாவின் எரிவாயு இறக்குமதியை நிறுத்தி ரஷ்யாவுக்கு எதிரான சர்வதேச தடைக்கு ஆதரவு அளித்தது.
மேலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்தன.
இது தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கருதி, ஜெர்மனி இருந்த 10-க்கும் மேற்பட்ட ரஷ்ய தூதர்களை வெளியேற்றியது.
இதன்பின், ரஷ்யாவில் பணியாற்றும் ஜெர்மன் அரசாங்க அதிகாரிகளின் உயர்ந்தபட்ச எண்ணிக்கையை 350 ஆக ரஷ்ய அரசாங்கம் குறைத்தது.
இதனால் ஜெர்மன் அரசாங்க தூதர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட எண்ணற்றோர் ரஷ்யாவை விட்டு விரைவில் வெளியேறவுள்ளனர்.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக, ஜெர்மனில் இயங்கி வரும் 5 ரஷ்ய தூதரகங்களில் 4 தூதரகங்களை மூடுவது என ஜெர்மன் அரசாங்க முடிவு செய்துள்ளது.