தடுக்கி கீழே விழுந்த அமெரிக்கா அதிபர் பைடன்..!
அமெரிக்காவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அதிபர் ஜோ பைடன் நிலை தடுமாறி கீழே வீழ்ந்துள்ளார்.
அமெரிக்காவின் கொலராடோவிலுள்ள விமானப்படை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் அதிபர் ஜோ பைடன் கலந்துகொண்டுள்ளார்.
இந்தநிலையில், குறித்த மேடையில் அதிபர் நிலை தடுமாறி நிலத்தில் வீழ்ந்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபர்களில் ஆக வயது கூடியவரான பைடன் மீண்டும் எழுந்து நிற்பதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் உதவியுள்ளனர்.
பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 921 பேருடனும் கை குலுக்குவதற்காக ஒரு மணித்தியலாத்திற்கு அதிகமாக அதிபர் ஜோ பைடன் நின்றிருந்தாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர் மேடைக்கு செல்லும்போது அதிபர் பைடன் மணல் மூடையில் தடுக்கி விழுந்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் கைகுலுக்கிக்கொண்டிருந்த இடத்தில் மணல் மூடையொன்று காணப்பட்டதாகவும் அமெரிக்கா ஊடகங்கள் கூறியுள்ளது.
நிலத்தில் விழுந்த அதிபரை விமானப்படை அதிகாரிகளும், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தூக்கிவிடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதேசமயத்தில் அவர் தனது விமானத்திற்கு திரும்பிய போது கேட்கப்பட்ட கேள்விகளிற்கு பதில் வழங்கவில்லை என செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அதிபர் பைடன் நல்லநிலையில் காணப்படுகின்றார் எனவும், உற்சாகாமான சிரிப்புடன் விமானத்தில் ஏறினார் எனவும் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தினால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என வெள்ளை மாளிகையின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.