நேட்டோ படையில் இணையும் இரு முக்கிய நாடுகள் – ஜோ பைடனின் அறிவிப்பு..!
நேட்டோ படையில் ஸ்வீடன் விரைவில் இணையும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இதற்கான பேச்சுவார்த்தை முடிவுற்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சர்வதேச அளவில் இப்போது சீனா பெரிய கையாக இருப்பதை போல கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சோவியத் ரஷ்யா பெரிய கையாக இருந்தது.
சோவியத் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். அதுமட்டுமல்லாது மற்ற நாடுகளுக்கு சோவியத் மிகப்பெரிய தலை வலியாகவும் இருந்தது.
அதுவரை பிரிட்டன்தான் எல்லாம், அது வைத்ததுதான் உலகம் முழுவதும் சட்டம் என்கிற நிலை இருந்தபோதும், பிரிட்டன் ஆட்சி செய்யும் நாடுகளில் ஏழ்மையும், வறுமையும், அடிமைத்தனமும் தலைவிரித்தாடின.
இந்நிலையில்தான் 1905ம் ஆண்டு தொடங்கி 1907ம் ஆண்டு வரை ரஷ்யாவில் மன்னர் ஆட்சிக்கு எதிராக புரட்சி நடந்து, ரஷ்யா – சோவியத் ரஷ்யாவாக மாறியது.
இந்த புரட்சி ரஷ்யாவை மட்டுமல்லாது உலகத்தையே ஒரு காட்டு காட்டிவிட்டது.
தொழிலாளர்களின் நலன், உரிமை, குறைந்தபட்ச ஊதியம், அனைவருக்கும் உணவு, ராணுவத்தில் புதிய தொழில்நுட்பம், விண்வெளியில் வரலாறு , பெண்கள் முன்னேற்றம் என எல்லாவற்றிலும் சோவியத் என்கின்ற பெயர்த்தான் அடிபட்டது. உலக மக்களும் சோவியத்துக்கு பயங்கர ஆதரவளித்தனர்.
எனவே அதுவரை மக்கள் மீது அதிகாரத்தை செலுத்தி வந்த பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கூட தங்களது அதிகாரத்தை தளர்த்தி மக்களுக்கு தேவையானவற்றை செய்ய தொடங்கின.
ஏனெனில் எங்கே நமது நாட்டிலும் புரட்சி வந்துவிடப்போகிறது என்கிற அச்சம்தான்.
மறுபுறம் சோவியத்தை வீழ்த்த பிரிட்டனுடன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கைகோர்த்தன.
ஆனால் 2ம் உலகப்போருக்கு பின்னர் பிரிட்டன் பலவீனமடைந்து அமெரிக்கா பலமடைந்தது.
இந்நிலையில் சோவியத் ரஷ்யாவை எதிர்க்க 1949ம் ஆண்டு அமெரிக்கா உருவாக்கிய ஒரு அமைப்புதான் ‘நேட்டோ’.
இது பிரிட்டன், பெல்ஜியம், லக்ஸம்பர்க், போர்ச்சுக்கல், கனடா, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் தொடங்கப்பட்டது.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சோவியத் நோக்கி ஒவ்வொரு நாட்டையும் தன்னுடன் இணைக்க முயற்சித்தது. இருப்பினும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
1949க்கும் 1999க்கும் இடைப்பட்ட காலத்தில் வெறும் 4 நாடுகள் மட்டுமே நேட்டோவில் இணைய ஒப்புக்கொண்டன.
ஆனால் தற்போது நேட்டோவில் இணைந்துள்ள நாடுகளின் எண்ணிக்கை 31 இதில் பெரும்பாலான நாடுகள் சோவியத் யூனியன் உடைந்த பின்னர் சேர்ந்தவையாகும்.
இப்படியே நேட்டோ பல நாடுகளை சேர்க்க தொடங்கியது. இந்நிலையில் இதில் ஸ்வீடனும் இணைய உள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 18ம் திகதி ஸ்வீடனுடன் சேர்ந்து நேட்டோவில் தானும் இணைய உள்ளதாக பின்லாந்து அமெரிக்காவிடம் ஒப்பந்தம் போட்டிருந்தது.
இதனை பரிசீலித்த அமெரிக்கா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29ம் திகதியே இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பை விடுத்திருந்தது.
மேலும் ஜூலை மாதம் 4ம் திகதியன்று பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் இதற்கான பேச்சுவார்த்தையும் நிறைவு செய்யப்பட்டது.
இதற்கு அடுத்த நாளே, நேட்டோ கூட்டங்களில் கலந்துகொள்ளும் அதிகாரப்பூர்வ அழைப்பாளர்களான இரு நாடுகளும் இருக்கும் என்று கூறி ஸ்வீடனுடன், பின்லாந்தும் சேர்ந்து கையெழுத்திட்டது.
இந்த பின்னணியில்தான் ஸ்வீடன் விரைவில் நேட்டோவில் இணையும்” என கூறியுள்ளார்.