;
Athirady Tamil News

மிரளவைக்கும் விசித்திர தண்டனைகள் – சிக்கித்தவிக்கும் வட கொரிய மக்கள்!

0

வடகொரிய நாட்டில் உள்ள பல கொடூரமான மற்றும் ஆச்சரியமான சட்டங்கள் பல உலக மக்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகில் உள்ள மர்மமான நாடான வட கொரியாவில் உள்ள கடுமையான சட்ட திட்டங்கள் பற்றியும், அவ்வப்போது கொடுக்கப்படும் தண்டனைகள் குறித்தும் பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

இருப்பினும் அந்த நாட்டில் நடப்பவைகளும், அங்கு சர்வாதிகார ஆட்சி செய்து வரும் கிம் ஜாங் உன் பற்றியும் பல மர்மங்கள் நீடித்த வண்ணம் உள்ளது.

வட கொரியாவில் நடக்கும் பல விடயங்கள் இலகுவில் வெளியே கசிவது குறைவு.

இந்தநிலையில், வேறு எந்த நாட்டிலும் இல்லாத விசித்திரமானதும், கொடுமையானதுமான முக்கிய தண்டனைகள் வட கொரியாவில் உள்ளது.

வெளிநாட்டு படங்கள், பாடல்கள் கேட்பதற்கு வடகொரியாவில் அனுமதி இல்லை. அதனை மீறி அமெரிக்க படங்களை பார்த்தாலோ, ஆபாச படங்கள் பார்த்தாலோ மரண தண்டனை விதிக்கப்படும்.

வட கொரியாவில் அதிபர் பங்கேற்கும் கூட்டங்களில் தப்பித்தவறி கொட்டாவி விட்டால் உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

2015 ஆம் ஆண்டு வடகொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் அதிபர் கிம் ஜாங் உன் கூட்டத்தில் தூங்கியதற்காக சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு அழைப்புகள் மேற்கொள்வது அங்கு தண்டனைக்குரிய குற்றமாகும். கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிநாட்டு அழைப்புகளை மேற்கொண்டதாக பலருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

வட கொரிய அதிபரையோ அவரது குடும்பத்தினரை இழிவாக பேசுவது தேசத் துரோக குற்றத்திற்கு இணையானதாக கருதப்படும். இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டால் மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

அரச ஊழியர்கள் அதிலும் குறிப்பாக ஆண்கள் மாத்திரமே மகிழுந்து செலுத்துவதற்கு அனுமதி உண்டு, பெண்களுக்கு அனுமதி கிடையாது.

மறைந்த வட கொரிய அதிபர் கிம் இல் சங் இறந்த தினமான ஜூலை 8 ஆம் திகதியில் அந்த நாட்டு மக்கள் சிரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைவிட அன்றைய தினம் சத்தமாக பேசவோ, மதுபானம் அருந்தவோ தடை உண்டு.

இந்த விதியை மீறினால் தொழிலாளர் முகாமில் அடைக்கப்படவோ அல்லது மரண தண்டனையோ விதிக்கப்படும்.

வட கொரியாவிற்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டு பயணிகள், அந்த நாட்டிற்குள் சென்றதும் தொலைபேசிகள், புகைப்படக்கருவிகளை ஒப்படைக்க வேண்டும்.

அதேபோல், சுற்றுலாப்பயணிகள் உடன் வட கொரிய நாட்டின் பாதுகாவலரும் வருவார். அவர் கூறுவதை கண்டிப்பாக கேட்க வேண்டும்.

17 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அந்த நாட்டை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறும். ஆனால் வேட்பாளர் ஒருவர் மட்டும் தான் இருப்பார்.

ஒருவர் தவறு செய்தாலும் அவருடைய குடும்பத்திற்கே தண்டனை விதிக்கப்படும். ஒரு தனிநபர் தவறு செய்தால் அவருடைய மூன்று தலைமுறையினருக்கு தண்டனை உண்டு.

வடகொரிய மக்கள் சொந்தமாக சொத்துக்களை வைத்துக் கொள்ள அனுமதி கிடையாது. அதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட காலம் வரை வசிப்பதற்கு அரசே இடத்தை ஒதுக்கி கொடுக்கும்.

வடகொரியாவில் அனைத்து நாட்களிலும் இரவு கட்டாயம் மின் தடை இருக்கும். மின்சாரத்தை பயன்படுத்த அனுமதி பெற வேண்டும். அதேசமயம் மைக்ரோவேவ் பயன்படுத்துவதும் சட்ட விரோதம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.