இந்தியாவிற்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தும் முயற்சி முறியடிப்பு !!
சிறிலங்காவில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 71 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை இந்திய பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்திய கடலோர காவல்படை, வருவாய் புலனாய்வு மற்றும் சுங்ககத்துறை ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையால், சிறிலங்காவில் இருந்து கடல் வழியாக இந்தியாவிற்கு 32.689 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
கடத்தல் முயற்சியை எதிர்பார்த்து, இந்திய முகவர்கள் மன்னார் வளைகுடாவில் இயங்கும் மீன்பிடி கப்பல்கள் மற்றும் இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு அருகில் உள்ள மீன்பிடி கப்பல்களை உன்னிப்பாகக் கண்காணித்து வந்துள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் மீன்பிடி துறைமுகத்தை நெருங்கி வந்த சந்தேகத்திற்கிடமான படகு மற்றும் மண்டபத்திற்கு தெற்கே சந்தேகத்திற்கு இடமான மற்றொரு படகு ஆகிய இரண்டு படகுகளையும் முகவர்கள் கைப்பற்றியுள்ளன.
மேலும், கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்கள் மற்றும் சந்தேக நபர்கள் சட்ட நடவடிக்கைக்காக காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.