அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஜூன் 22ல் உரை!!
பிரதமர் மோடி அமெரிக்க கூட்டு நாடாளுமன்ற குழு கூட்டத்தில் வரும் 22ம் தேதி உரையாற்ற உள்ளார். அமெரிக்க அதிபர் பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்து உரையாற்ற உள்ளார். அப்போது பிரதமர் மோடிக்கு, அதிபர் பைடன் விருந்து கொடுக்கிறார். மேலும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும், பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த நிலையில் ஜூன் 22ம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதை அமெரிக்க நாடாளுமன்ற அவைத்தலைவர் கெவின் மெக்கார்த்தி, செனட் சபை தலைவர் சக் சூமர், செனட் குடியரசு கட்சி தலைவர் மிச் மெக்கோனல், செனட் ஜனநாயக கட்சி தலைவர் ஹக்கிம் ஷெப்ரீஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்து உள்ளனர்.