மேலும் 200 இந்திய மீனவர்கள் விடுவிப்பு: பாகிஸ்தான் அறிவிப்பு!!
பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை அந்த நாடு கைது செய்து சிறைகளில் அடைத்து வருகிறது. பாகிஸ்தான் சிறைகளில் இந்திய மீனவர்கள் பலர் இருப்பதாக தகவல்கள் வெளியாயின. கடந்த மாதம் 198 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் சிறையில் இருந்து 200 மீனவர்கள் உட்பட 203 இந்தியர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி அறிவித்துள்ளார்.