எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அதிரடி உத்தரவு !!
இலங்கையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறைந்தது 50 வீத எரிபொருள் இருப்பை பேணுவது கட்டாயம் எனவும், அவ்வாறு 50 வீத இருப்பை பேணாத எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.