இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்- மம்தா பானர்ஜி !!
மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளான பகுதிக்குச் சென்று பார்வையிட்டார் மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. அதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- இந்த நூற்றாண்டின் இந்தியாவில் மிகப்பெரிய ரெயில் விபத்து இது. பலியானோர் எண்ணிக்கை உயரலாம். ரெயில்வே துறை உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவாக அறிவித்துள்ளது. நாங்கள் மேற்கு வங்காள மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க இருக்கிறோம்.
வேலை முடியும் வரை மேற்கு வங்காள மக்கள் ரெயில்வே மற்றும் ஒடிசா அரசுடன் இணைந்து வேலை செய்வார்கள்” எனத் தெரிவித்தார். இந்த விபத்தில் இரண்டு ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டன. இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மீட்பு பணி நிறைவடைந்த நிலையில், தற்போது தண்டவாளம் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.