நாடுமுழுவதும் 17 ஆயிரம் தன்சல்கள்!!
நாட்டின் நிலையைக் கருத்திற்கொள்ளும் போது, 3 வருடங்களுக்கு பின்னர் அரசாங்கத்தால் இவ்வருடம் பொசன் தினத்தைக் கொண்டாட முடிந்துள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாடுமுழுவதும் 12 மணிநேர மின்தடை காணப்பட்டதால் தன்சல் நிகழ்வுகளை நடாத்த முடியவில்லை என ரன்ன சம்புத்தலோகவில் நடைபெற்ற பொசன் கண்காட்சியைக் காண வந்த போது அமைச்சர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் இருளில் மூழ்கியிருந்த காலம் அது. அதிர்ஷ்டவசமாக ஓராண்டு குறுகிய காலத்துக்குள் அந்த நிலையைத் தவிர்க்க முடிந்தது என அவர் மேலும் தெரிவித்தார் .
நாடுமுழுவதும் இவ்வருடம் 17, 180 பதிவுசெய்யப்பட்ட பெரிய மற்றும் 20,000 இற்கும் அதிகமான சிறியளவிலான தன்சல்கள் நடைபெற்றதாகவும், பொருளாதார நெருக்கடியிலுள்ள ஒரு நாட்டில் இத்தனை தன்சல்கள் பகிர்ந்தளிக்கப்படுவது ஆச்சரியமானது எனவும் அவர் தெரிவித்தார்.