தற்கொலை செய்துகொண்ட விமானப்படை வீரர் !!
பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருகோணமலை அபயபுர பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 38 வயதுடைய இலங்கை விமானப்படையின் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மேலும் பல விமானப்படை வீரர்களுடன் கடமையில் ஈடுபட்டிருந்த போது பொன்சேகா பிளேஸில் உள்ள காணி ஒன்றில் வெறிச்சோடிய வீடொன்றுக்கு அருகில் தனது கடமை துப்பாக்கியை பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நீதவான் விசாரணைகள் நடத்தப்பட்டு சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.