அமரர் மு.சிவசிதம்பரத்தின் 21 ஆம் ஆண்டு நினைவுதினம் நெல்லியடி நகரில் அனுஷ்டிக்கப்பட்டது.!! (PHOTOS)
முன்னாள் பிரதி சபாநாயகரும் உடுப்பிட்டித் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 21 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
நெல்லியடி நகரில் அமைந்துள்ள சிவசிதம்பரத்தின் உருவச்சிலையடியில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.