விவசாய மேம்பாட்டிற்கு ட்ரோன் தொழில்நுட்பம்!!
நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தை விவசாயத்துறை மேம்பாட்டிற்குப் பயன்படுத்தலாம் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ட்ரோன் இயக்கத்தின் நவீன தொழில்நுட்பம் நேரத்தை மிச்சப்படுத்தவும், விவசாயத் துறையில் ஏற்படும் விரயத்தை குறைக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் பயன்படுத்த வேண்டும் என தொழில் பயிற்சி அதிகாரசபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ட்ரோன் முன்னோடிப் பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.
பிற நாடுகளும் இதைத் தான் தற்போது தமது முன்னேற்றத்திற்காக பயன்படுத்துகின்றன. துரதிஷ்டவசமாக எமது நாடு இப்போது தான் இந்நத் தொழில்நுட்பத்திற்கு இசைவாக்கமடைகிறது.
இந்தப் பயிற்சிக்குப் பிறகு, பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் போன்ற ஏக்கர் நிலங்களில் விவசாயத்திற்கு இந்த முயற்சிகளைப் பயன்படுத்தலாம் என அமைச்சர் மேலும் கூறினார்.