வெனிசுலாவில் இடிந்து விழுந்த தங்க சுரங்கம் – 12 பேர் பலி..!
வெனிசுலாவில் பொலிவார் மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது.
வெனிசுலாவில் பொலிவார் மாகாணத்தின் எல் கால்லோ என்ற பகுதியில் பெய்த கனமழையால் அங்கிருந்த தங்க சுரங்கமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக சுரங்க இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இதுவரை உயிரிழந்த 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த சுரங்க விபத்தில் இருந்து 112 பேர் வரை உயிருடன் மீட்க்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சுரங்கத்தில் வேலை செய்த அனைவரும் சட்டவிரோதமாக சுரங்கத்தை குடைந்து தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.