உடலுறவை விளையாட்டாக அங்கீகரித்த ஐரோப்பிய நாடு..! நடுவர்களாக பார்வையாளர்கள் !!
ஐரோப்பிய நாடான சுவீடன் அரசு உடலுறவை விளையாட்டாக அங்கீகரித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஸ்வீடன் அரசு உடலுறவை ஒரு விளையாட்டாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அடுத்த வாரம் தனது முதல் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த போட்டியானது வரும் 8ம் திகதி ஆரம்பமாகி, 6 வாரங்கள் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிக்கு பார்வையாளர்கள் மற்றும் நடுவர்கள் இருப்பார்கள் என போட்டியை நடத்தும் ஸ்வீடன் செக்ஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை, போட்டியில் 70 சதவீத வாக்குகளை பார்வையாளர்கள் அளிப்பார்கள் என்றும், 30 சதவீத வாக்குகளை நடுவர்கள் அளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் நபர்களுக்கு துணையை கவர்தல், உடல் மசாஜ், ஓரல் செக்ஸ், உடலுறவு, சகிப்புத்தன்மை உள்ளிட்ட 16 பிரிவுகளில் போட்டி நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.