முன்னணி உற்பத்தி நாடுகளை பின் தள்ளிய இந்திய உற்பத்தி துறையின் வளர்ச்சி!
இந்தியாவின் உற்பத்திக்கான PMI குறியீடு எப்போதும் இல்லாத வகையில் மே மாதம் உயர்வை காட்டியுள்ளது.
ஏப்ரல் மாதம் 57.2 ஆக இருந்து உற்பத்திக்கான PMI குறியீடு மே மாதம் 58.7 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலும், உலக நாடுகளிலும் இந்திய உற்பத்திகளின் தேவை அதிகரித்த காரணத்தால் உற்பத்தி துறை வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.
கடந்த சில 3 மாதங்களாக இந்தியாவின் உற்பத்தி துறை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருக்கிறது.
குறிப்பாக கொரோனா நோய் தொற்றுக்கு பின்னர் இந்திய உற்பத்தி துறை சிறப்பாக செயல்படுகிறது.
இதன் காரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2022 ஆம் நிதியாண்டில் 6.1 சதவீதத்தில் இருந்து 2023 ஆம் நிதியாண்டில் 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஏனைய ஆசிய நாடுகள் அதேசமயத்தில் உலகின் முன்னணி உற்பத்தி நாடுகளாக இருக்கும், ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகியவை உற்பத்தி அளவீடுகளில் தடுமாற்றத்தை எதிர்கொண்டு உள்ளது.
இந்திய சந்தையில் உருவாகியுள்ள அதிகரித்த கேள்வி இந்திய உற்பத்தி துறை வளர்ச்சி பாதைக்கு செல்ல முக்கிய காரணமாக உள்ளது என எஸ் அண்ட் பி குளோபல் அமைப்பின் பொருளாதார பிரிவின் துணை தலைவராக இருக்கும் போலியானா டி லிமா தெரிவித்துள்ளார்.