;
Athirady Tamil News

ஸ்னாப்டிராகன் 870 பிராசஸருடன் அடுத்த வாரம் இந்தியா வரும் சியோமி டேப்லெட்!!

0

சியோமி நிறுவனம் தனது சியோமி பேட் 6 மாடல் இந்திய சந்தையில் ஜூன் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும் புதிய டேப்லெட் மாடல் வெளியீட்டை உணர்த்தும் டீசரை சியோமி இந்தியா வெளியிட்டு உள்ளது. டீசர்களின் படி புதிய சியோமி பேட் 6 மாடலில் கீபோர்டு டாக் மற்றும் சியோமி ஸ்மார்ட் பென் 2-ம் தலைமுறை மாடலும் அறிமுகமாகிறது. இத்துடன் பேட் 6 மாடலில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், 13MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது. இந்திய சந்தையில் சியோமி பேட் 6 மாடல் கிரே மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சியோமி பேட் 6 அம்சங்கள்: 11 இன்ச் 2880×1800 பிக்சல் 16:10 டிஸ்ப்ளே, 30/48/50/60/90/120/144Hz ரிப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் அட்ரினோ 650 GPU 6 ஜிபி/8 ஜிபி ரேம் 128 ஜிபி / 256 ஜிபி மெமரி ஆண்ட்ராய்டு 13 மற்றும் எம்ஐயுஐ 14 13MP பிரைமரி கேமரா 8MP செல்ஃபி கேமரா யுஎஸ்பி டைப் சி ஆடியோ டால்பி அட்மோஸ், 4 ஸ்பீக்கர்கள், 4 மைக்ரோபோன்கள் வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி 8840 எம்ஏஹெச் பேட்டரி 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் இந்த டேப்லெட் மாடல் அமேசான் மற்றும் Mi வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை விவரங்கள் அடுத்த வாரம் தெரியவரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.