;
Athirady Tamil News

ஐபேட் மாடலுக்கு நிகரானது.. டியுரபிலிட்டி டெஸ்டில் அசத்திய ஒன்பிளஸ் பேட்!!!

0

ஒன்பிளஸ் பேட் மாடல் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கண்டறியும் சோதனையை பிரபல யூடியூப் சேனல் நடத்தியது. அதில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட் மாடல் அனைத்து வித கடினமான சோதனைகளிலும் அசத்தி இருக்கிறது. ஆண்ட்ராய்டு டேப்லெட் சந்தையில் கிடைக்கும் சிறந்த டேப்லெட்களில் ஒன்றாக ஒன்பிளஸ் பேட் உள்ளது. சாதனங்கள் உற்பத்தியின் போதே மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சங்களில் ஒன்றாக டியுரபிலிட்டி இருக்க வேண்டும். ஒன்பிளஸ் பேட் மற்றும் அதனுடன் வழங்கப்படும் ஸ்டைலோ அக்சஸரீ சமீபத்தில் ஜெர்ரிரிக்எவ்ரிதிங்கின் (JerryRigEverything) டெஸ்டில் ஈடுபடுத்தப்பட்டது.

அதில் புதிய ஒன்பிளஸ் பேட் மாடல் பெருமளவு டெஸ்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. புதிய டேப்லெட் மாடல் அசத்தலான டியுரபிலிட்டி கொண்டிருப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், இது ஒன்பிளஸ் நிறுவனம் உறுதியான சாதனங்களை உருவாக்கி வருவதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்து இருக்கிறது. தோற்றத்தில் ஒன்பிளஸ் பேட் மாடல் ஆப்பிள் ஐபேட் போன்றே காட்சியளிக்கிறது. டியூரபிலிட்டி டெஸ்டின் படி, ஒன்பிளஸ் பேட் மாடலின் ஸ்கிரீனை ஸ்கிராட்ச் செய்ததில் அது ஆறு மதிப்பெண்களை பெற்றது. இதேபோன்ற மதிப்பெண்கள் தான் ஆப்பிள் ஐபேட் மாடலும் பெற்று இருந்தது. ஒன்பிளஸ் பேட் மாடலின் டிஸ்ப்ளே நேரடி தீயில் காண்பிக்கப்பட்ட நிலையிலும், பத்து நொடிகள் வரை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பத்து நொடிகளை கடந்த பிறகே, அதன் பிக்சல்கள் சரியத் துவங்கின.

மேலும் இவை நிரந்தரமாக சரியாமல், சிறிதுநேரத்தில் மீண்டும் பழைய நிலைக்கே சீராகிவிட்டன. IPS LCD ரக பேனல் இதுபோன்றே இருக்கும். ஒன்பிளஸ் பேட் மாடலின் ஃபிரேம் ஆர்கிடெக்ச்சர், சாதனத்தை சுற்றிலும் மெட்டல் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இத்துடன் சிறிய பிளாஸ்டிக் பகுதி ஸ்டைலோவின் வயர்லெஸ் சார்ஜிங்கிற்காக வழங்கப்பட்டு இருக்கிறது. வளைத்து பார்க்கப்படும் பெண்டு டெஸ்ட் (Bend Test) சோதனையில் ஒன்பிளஸ் பேட் மாடல் அதிக உறுதியாக இருந்ததோடு, ஓரளவுக்கு தான் சிதைந்தது. டேப்லெட்-இன் பின்புறத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்த பிறகு தான் ஃபிரேம் மடிந்தது. எனினும், டிஸ்ப்ளேவுக்கு அதிக சேதங்கள் ஏற்படவில்லை. மாறாக வெளியிலும் வரவில்லை.

பல்வேறு ஐபேட் மாடல்கள் இந்த சோதனையில் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் ஸ்டைலோ மாடல் பெண்டு டெஸ்டை எதிர்கொள்ளும் போது நிலைத்திருக்கவில்லை. இதன் உள்புறம் 82 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் பிரெஷர் சென்சிங்கிற்காக காப்பர் பேட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஸ்டைலோவில் உள்ள காந்த பொருள், டேப்லெட்டுன் இணைந்திருக்க செய்கிறது. ஒட்டுமொத்தமாக ஒன்பிளஸ் பேட் மாடல் டியூரபிலிட்டி டெஸ்டின் பல்வேறு நிலைகளில் நல்ல மதிப்பெண்களை பெற்று அசத்தியது. ஆப்பிள் ஐபேட் மாடலுடன் ஒப்பிடும் போதும், இந்த டேப்லெட் அதன் உறுதித்தன்மை விவகாரத்தில் சிறந்து விளங்குவது தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.