டயானாவின் பதவி பறிபோகுமா?
டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06) அறிவிக்கவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் இந்த மனு தொடர்பான வாதங்களை விசாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு செயற்பாட்டாளர் ஒஷல ஹேரத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளதாகவும், நாட்டின் அரசியலமைப்பின் படி, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என அறிவித்து, அதனை இரத்துச் செய்வதற்கான ஆணை பிறப்பிக்குமாறு மனுதாரர் ஓஷல ஹேரத் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.