;
Athirady Tamil News

சுதந்திரத்தை முடக்க ஆதரவளியோம்!!

0

ஊடக சுதந்திரத்தை முடக்கும் வகையில் உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டம் மூலம் இருக்குமாயின் அதற்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம். யூடியூப் போன்ற சில சமூகவலைத்தளம் ஊடாக பொருத்தமற்ற வகையில் செயற்படும் ஒரு சிலரைக் கண்காணிக்க பிரத்தியேகமான சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

களுத்துறையில் நேற்று (05) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோமே தவிர தவறான தீர்மானங்களுக்கு ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை.

அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை ஒருதரப்பினர் தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

குறிப்பாக யூடியுப் வலைத்தளத்தில் பணம் சம்பாதிப்பதற்காக ஒரு தரப்பினர் தேசிய மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

தேசிய மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களை கண்காணிக்க விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும்.கருத்து சுதந்திரம் உள்ளதன் பொருட்டு விரும்பிய அனைத்தையும் குறிப்பிட முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.