ஜனாதிபதி எதற்காக விருந்து வழங்கினார் ?
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விருந்துபசாரம் செய்தது தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அண்மையில் நுவரெலியாவில் நீதியரசர்களுக்காக ஜனாதிபதி விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச தெரிவித்தார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
முக்கியமான பல வழக்குகளின் தீர்ப்புகள் வழங்கப்படவுள்ள இவ்வேளையில், ஜனாதிபதி இவ்வாறான விருந்துகளைத் தவிர்த்திருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன்.
எனவே, தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் நிதிப் பற்றாக்குறை இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது எனத் தெரிவித்த சஜித் பிரேமதாச, உள்ளூராட்சித் தேர்தலையோ அல்லது ஜனாதிபதித் தேர்தலையோ நடத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை முதலில் திட்டமிடப்பட்டதை விட முன்னதாக நடத்துவதற்கான திருத்தங்களுக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி தயாராக இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.