இலங்கையில் கோழிப் பண்ணைகள் காணாமல் போய்விடும் அபாயம் !!
கோழி இறைச்சியினை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் சுஜிவ தம்மிக தெரிவித்துள்ளார்.
கோழி இறைச்சியின் விலை தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
உடனடியாக தற்போது நிலவும் விலையினை ஆய்வு செய்து திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கால்நடை உற்பத்தித் திணைக்களம் முழுமையாக இதில் தலையிட்டு தீர்வு காணாவிட்டால் கோழிப் பண்ணைகள் நாட்டிலிருந்து காணாமல் போய்விடும்.
எனவே கோழி இறைச்சியினை இறக்குமதி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் சுஜிவ தம்மிக மேலும் குறிப்பிட்டுள்ளார்.