பாலியல் உறவு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டதா – முற்றாக மறுத்தது சுவீடன் !!
பாலியல் உறவை விளையாட்டாக அங்கீகரித்துள்ளதாக வெளியான செய்திகளுக்கு சுவீடன் விளையாட்டுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
சுவீடன் நாட்டில் உடலுறவு ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவதாக ஒரு தகவல் வெளியானது. அதன்படி, ஜூன் 8 ஆம் திகதி இப்போட்டி தொடங்கவுள்ளதாகவும், இப்போட்டியில் 20 பேர் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதற்கு சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், சுவீடன் நாட்டில் இருந்து அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியாகாத நிலையில், இது போலி செய்தி என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, சுவீடன் அரசு கூறியுள்ளதாவது: சுவீடன் விளையாட்டு கூட்டமைப்பில் பாலியல் உறவு கூட்டமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர் இல்லை என கூறப்பட்டுள்ளது. மேலும், சுவீடன் அரசு பாலியல் உறவை விளையாட்டாக அங்கீகரித்துள்ளதாக வெளியான செய்திகளுக்கு அந்த நாட்டு விளையாட்டுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.