உலக நாடுகளின் கழிவுகள் இலங்கையில் குவிகின்றன !!
இலங்கையில் ஏழு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ளன . சீனா, இந்தியா, பங்களாதேஷ், மலேசியா உட்பட எட்டு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளன.
பவளப்பாறை சூழலியல் தொடர்பான இலங்கை – சீன கருத்தரங்கில் கலந்து கொண்ட ருகுணு பல்கலைகழகத்தின் கலாநிதி டேர்னி பிரதிப்குமார இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இலங்கையின் கடற்கரைகளில் 32 மில்லியன் கிலோ கிராம் பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பல நாடுகளில் இருந்து நீரில் அடித்துவரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளும் இதில் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.