மரம் முடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு !!
ஹட்டன்- நுவரெலியா செல்லும் பிரதான வீதியில் லிந்துலை மட்டுகலை தோட்ட வீதியோரத்தில் பழமை வாய்ந்த வாகை மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது.
சுமார் மூன்று மணி நேரம் இப்பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அத்தோடு நுவரெலியா- தலவாக்கலை, ஹட்டன்- பதுளை போன்ற பிரதேசங்களுக்குச் செல்லும் போக்குவரத்து சேவையையும் பாதிக்கப்பட்டிருந்தது.
முறிந்து விழுந்த மரத்தினை அப்புறப்படுத்துவதற்கு மட்டுக்கலை தோட்ட மக்கள் லிந்துலை பொலிஸார் முன்னெடுத்தனர். அதன்பின் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.
முறிந்து விழுந்த மரத்தில் குளவி கூடுகள் காணப்பட்டதால் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் பெரும் சிரமத்தை இவர்கள் எதிர்கொண்டனர்.. அத்தோடு வீதியோரங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்துமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மரம் முடிந்து விழுந்ததால் வைத்தியசாலைக்கு செல்லும் பொதுமக்கள் ஏனைய தேவைகளுக்கு செல்லும் பிரதேச மக்களும் பல்வேறு சிரமத்துக்கு முகம் கொடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.