கணித கற்றல் உபகரணத் தயாரிப்பு போட்டிப் பரிசளிப்பும் கௌரவிப்பும்!! (PHOTOS)
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கணித மன்றத்தால் நடத்தப்பட்ட கணித கற்றல் உபகரண தயாரிப்பு போட்டிக்கான பரிசளிப்பு வைபவம் 07.06.2023 கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண வலய கல்வி பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்
தனது 41 வருட கல்விச் சேவையை நிறைவு செய்து எதிர்வரும் 22.06.2023 உடன் அரச பணியில் இருந்து ஓய்வு பெறும் பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணனின் மணிவிழாவையொட்டி ஆசிரிய கலாசாலை சமூகத்தினர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர். கௌரவிப்பு உரையை கலாசாலை பிரதி அதிபர் திரு க. செந்தில்குமரன் ஆற்றினார்.
முத்து இராதாகிருஷ்ணன் தான் வெளியிட்ட நூல்களின் ஒரு தொகுதியை கலாசாலை கிருஷ்ணை படிப்பகப் பொறுப்பு விரிவுரையாளர் வே. சேந்தனிடம் கையளித்தார்.